பேரிடர் மீட்புக்குழுவினர் மாதிரி ஒத்திகை
ஏரி, குளம் மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ரப்பர் படகு, மீட்பு பணியின் போது 100 மீட்டர் சுற்றளவிற்கு வெளிச்சம் தரவல்ல உயர் கோபுர விளக்கு, உயிர்காக்கும் மிதவை மற்றும் உயிர்காக்கும் உடை (லைஃப் ஜாக்கெட்), இரும்பு பொருட்களை வெட்ட வல்ல ஹைட்ராலிக் முறையில் இயங்கும் கருவி (ஸ்பெரட்டர் ஒத்திகை
பெரம்பலூர் மாவட்டம் பேரிடர் காலங்களில் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது என்பது குறித்து பேரிடர் மீட்புக்குழுவினர் மாதிரி ஒத்திகை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் பார்வையிட்டார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பேரிடர் காலங்களில் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது, பேரிடர் சம்பவ இடத்தில் இருந்து எவ்வாறு தப்பிப்பது என்பது குறித்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரின் மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி இன்று (28.1.2025) நிகழ்த்திக் காட்டப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இந்நிகழ்வைப் பார்வையிட்டார். பேரிடர் காலங்களில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், வெள்ளம், மற்றும் இயற்கை சீற்றங்களில் இருந்து பொதுமக்களை மீட்க எடுக்கப்படும் நடவடிக்கைகள், பேரிடர் மேலாண்மை மற்றும் அவசர கால மீட்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமானதாக உள்ளதால், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது, அதனடிப்படையில் ஏரி, குளம் மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ரப்பர் படகு, மீட்பு பணியின் போது 100 மீட்டர் சுற்றளவிற்கு வெளிச்சம் தரவல்ல உயர் கோபுர விளக்கு, உயிர்காக்கும் மிதவை மற்றும் உயிர்காக்கும் உடை (லைஃப் ஜாக்கெட்), இரும்பு பொருட்களை வெட்ட வல்ல ஹைட்ராலிக் முறையில் இயங்கும் கருவி (ஸ்பெரட்டர் மற்றும் கட்டர்), மிதவை பம்பு (வெள்ள காலத்தில் தேங்கியுள்ள நீரை வெளியேற்ற), விபத்து நேரங்களில் வாகனங்களின் அடியில் சிக்கியுள்ளவர்களை மீட்க உதவும் (ஏர் லிப்டிங்) ஆகிய பொருட்களை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் காட்சிப்படுத்தி, அவற்றை எந்த நேரங்களில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் விரிவாக விளக்கமளித்தனர். வெள்ள நேரங்களில் பொது மக்களை காப்பாற்ற, தீயணைப்பு மற்றும் பாதுகாப்புத் துறையினர் விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றி அவர்களை அந்த இடத்தில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு பல்வேறு முறைகளை பின்பற்றி அழைத்துச் செல்வது குறித்த செயல்விளக்கம் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்து காண்பிக்கப்பட்டது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, சார் ஆட்சியர் சு.கோகுல் தேசிய பேரிடர் மீட்புக்குழு துணை கமெண்டர் எஸ்.வைத்தியலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ச.வைத்தியநாதன், உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story



