மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் கொடியசைத்துதொடங்கி வைத்தார் ..

மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன்  கொடியசைத்துதொடங்கி வைத்தார் ..
X
உபயோகிப்பாளர் உரிமைக் கமிட்டி சார்பாக சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார் ..
விருதுநகரில் உபயோகிப்பாளர் உரிமைக் கமிட்டி சார்பாக சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார் .. இந்தியா முழுவதும் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஜனவரி 1 முதல் 31 ஆம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி இந்தியா முழுவதும் இந்திய அரசால் பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது மேலும் தமிழக முழுவதும் தமிழக அரசால் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன, அதனை முன்னிட்டு இன்று விருதுநகர் கிருஷ்ணமாச்சாரி சாலையில் அமைந்துள்ள ஹா.ஜி .பி செய்யது முகமது மேல்நிலைப் பள்ளியில் உபயோகிப்பாளர் உரிமைக் கமிட்டி சார்பாக நடந்த சாலைப் பாதுகாப்பு விழிப்பு ணர்வு பேரணியில் , பள்ளியில் பயிலும் பள்ளி மாணவ ,மாணவியர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர் பேரணியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவிகள் | வானங்களில் செல்லும்போது அதிவேகம் கூடாது,சாலை விபத்து நடந்தால் அவசர ஊர்திக்கு 108 யும்,உதவிக்கு காவல் துறைக்கு 100 ஐ அழைக்கவும், தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டவும்,தலைக்கவசம் உயிர்கவசம் , போன்ற பதாகைகளை கையில் ஏந்திய படி விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு பேரணியானது விருதுநகர் கிருஷ்ண மாச்சாரியார் சாலையில் அமைந்துள்ள ஹாஜிபி செய்து முகமது மேல்நிலைப் பள்ளியில் ஆரம்பித்து, பாவாலி , பழைய பேருந்து நிலையம், மதுரை ரோடு, வி.வி.ஆர் சிலை, தேசபந்து மைதானம் வழியாக சீதக்காதி தெருவில் அமைந்துள்ள ஹாஜிபி செய்து பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முடிவடைந்தது
Next Story