ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்
X
ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் அருகே பூர்விக ஆலய வழிபாடு வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனுச்சகுடி கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் ஆலயத்தின் வழிபாடு உரிமை வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது இந்து ஜனநாயக பேரவையின் நிறுவனத் தலைவர் இளையராஜா கூறுகையில் ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் எங்களது பூர்விக குடிமக்களின் கோயிலாகவும் இந்த கோயிலின் வழிபாட்டு உரிமையை மறுக்கும் இந்து சமய அறநிலையத்துறையை வன்மையாக கண்டிக்கிறோம் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து அனைத்து பொதுமக்களும் வழிபாடு நடத்துவதற்கு தடை இல்லாமல் ஏற்பாடு செய்து தர வேண்டும் பூசாரிகளின் உரிமைகளையும் கடமைகளையும் செய்ய விடாமல் தடுத்து வரும் இந்து சமய அறநிலைத்துறை நிர்வாகி உடனடியாக பணியிட நீக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார் ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி நீதிமன்றங்களில் வழக்கு இருந்தும் இந்து சமய அறநிலை துறை அதிகாரி தன்னிச்சையாக செயல்படுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர்
Next Story