சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் துவக்கி வைத்தார்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் துவக்கி வைத்து தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலைகவசம் கொடுத்தும், தலைக்கவசம் அணியாமல் வந்ததற்கு அவதாரம் போட வைத்த மாவட்ட ஆட்சியர்.....
விருதுநகரில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் துவக்கி வைத்து தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலைகவசம் கொடுத்தும், தலைக்கவசம் அணியாமல் வந்ததற்கு அவதாரம் போட வைத்த மாவட்ட ஆட்சியர்..... இந்தியாவில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு விருதுநகர் வட்டார போக்குவரத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விருதுநகர் வட்டா போக்குவரத்து அலுவலகத்தின் முன்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் இந்த பேரணியில் 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர்கள் மற்றும் இருசக்கர வாகன விற்பனையாளர்கள் கலந்து கொண்டு, சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திய படி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வந்த நபர்களுக்கு புதியதாக தலைகவசம் வழங்கியும், தலைகவசம் அணியாமல் வந்ததற்கு அபாராதம் விதிக்க போக்குவரத்து காவல்துறையினரிடம் கேட்டுக் கொண்டார். மேலும் தலைக்கவசம் அணியாமல் வந்த நபர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி, இதுவரை தலைகவசம் அணியாமல் விபத்தில் இறந்த விபரம் குறித்து விளக்கத்தையும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் விளக்கி கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த பேரணியானது விருதுநகர் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகவளாகத்தில் துவங்கி -மதுரை தேசிய நெடுஞ்சாலையின் வழியாக சென்று எம்.ஜி.ஆர்.சாலை, மற்றும் புதிய பேருந்து நிலையம் வழியாக சென்று மீண்டும் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் முடிவடைந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியில் சூலக்கரை மற்றும் விருதுநகர் காவல் துறையினர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story