சாலை விதிகளை பின்பற்றுவோர்க்கு இனிப்புகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகள்.

சாலை விதிகளை பின்பற்றுவோர்க்கு இனிப்புகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகள்.
X
சாலை விதிகளை பின்பற்றுவோர்க்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.*
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சாலை பாதுகாப்பு மற்றும் இருசக்கர வாகனங்களில் வருபவர் ஹெல்மெட், நான்கு சக்கர வாகனங்களில் வருபவர் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு சாலை விதிகளை பின்பற்றுவோர்க்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் சாலை விதிகளை பின்பற்றுவது குறித்து பல்வேறு அமைப்பினர், தொண்டு நிறுவனங்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சர்ச் நான்கு முக்கு சந்திப்பில் வாகன ஓட்டிகள் சாலை பாதுகாப்பு அவசியத்தை வலியுறுத்தி கிருஷ்ணன் கோவில் சங்கரா கண் மருத்துவமனை சார்பில் மருத்துவர்கள் ஊழியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை நகர்காவல் ஆய்வாளர் முத்துக்குமார் துவக்கி வைத்தார். ஹெல்மெட் அணிவது சீட் பெல்ட் அணிவது குறித்து வாகன ஓட்டிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டன. சாலை விதிகளை பின்பற்றி ஹெல்மெட்,சீட் பெல்ட் அணிந்து வந்தவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டன.
Next Story