விவசாயிகளுக்கு நீர் வள நில வளத் திட்டத்தின் நெல் பயிரில் கீழ் பண்ணைப் பள்ளி பயிற்சி

X
Komarapalayam King 24x7 |28 Jan 2025 8:44 PM ISTகுமாரபாளையத்தில் விவசாயிகளுக்கு நீர் வள, நில வளத் திட்டத்தின் நெல் பயிரில் கீழ் பண்ணைப் பள்ளி பயிற்சி முகாம் நடந்தது.
வேளாண்மை துறையின் மூலம் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வீரப்பம்பாளையத்தில் தமிழ்நாடு நீர் வள நில வளத் திட்டம் கீழ், விவசாயிகளுக்கு நெல் பற்றிய பண்ணை பள்ளி பயிற்சி முகாம் வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயமணி தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக தோட்டக்கலை உதவி இயக்குநர் குணசேகரன் பங்கேற்று, நெற்பயிரில் ஏற்படும் நோய்கள் மற்றும் பூச்சியினால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவற்றைக் கட்டுபடுத்தும் முறைகள் மற்றும் அறுவடைக்கு பின் செய்ய வேண்டிய தொழில்நுட்பங்கள் மற்றும் நெல் விதை பராமரிக்கும் முறைகள் பற்றி பேசினார். துணை வேளாண்மை அலுவலர் மாயாஜோதி பங்கேற்று, கோடை பட்டம் விதைப்புக்கு, விதைகளின் இருப்பு நிலை மற்றும் இடுபொருட்களின் மானியத் திட்டங்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்து கூறினார். அப்பகுதி உதவி வேளாண்மை அலுவலர் நிஷா பங்கேற்று, நுண்ணீர் பாசனம், மண் புழு வளர்ப்பு, பயிர் காப்பீடு, பிரதம மந்திரி கெளரவநிதி, உழவன் செயலியில் தமிழ் மண் வளம், மானிய திட்டங்கள் குறித்து பேசினார். மேலும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் கிருபா மற்றும் அருண்குமார் இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.
Next Story
