அஞ்சலகத்தில் ஆதார் சேவை மையம் செயல்பட நடவடிக்கை எடுக்க ம.நீ.ம கோரிக்கை

X
Komarapalayam King 24x7 |28 Jan 2025 8:48 PM ISTகுமாரபாளையம் அஞ்சலகத்தில் ஆதார் சேவை மையம் நிரந்தரமாக தினசரி செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மையம் சார்பில், நாமக்கல் தலைமை கோட்ட கண்காணிப்பாளர் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு மக்கள் நீதி மையம் கோரிக்கை
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அஞ்சலகத்தில் ஆதார் சேவை மையம் நிரந்தரமாக தினசரி செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மையம் சார்பில், நாமக்கல் தலைமை கோட்ட கண்காணிப்பாளர் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு மக்கள் நீதி மய்யம் மகளிர் அணி சார்பாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: குமாரபாளையம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் செயல்படுத்துவது இல்லை. முதியோர்கள், கர்ப்பிணி பெண்கள், மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் தங்களின் ஆதார் பிழை திருத்தம் செய்வதற்காக குமாரபாளையம் அஞ்சல் அலுவலகத்திற்கு சென்றால், பவானி அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று மாற்றிக் கொள்ளுமாறு அங்கே அனுப்பி விடுகிறார்கள். பவானி அஞ்சல் அலுவலகம் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் பணிகள் செய்யாமல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்றால் அங்கே பணி செய்பவர்கள் பொதுமக்களை திட்டுகிறார்கள். ஆதார் சேவை சம்பந்தமாக அனைத்து சேவைகளையும் குமாரபாளையத்தில் உள்ள தபால் நிலையத்தில் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பற்றி மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா கூறியதாவது: 40, 50 ஆண்களுக்கு முன்பு பிறந்தவர்கள் பெரும்பாலும் பிறப்பு சான்று எடுக்காமல் உள்ளனர். இதனை ஆதார் சேவைக்கு கேட்பதால், அதனை பெற அவர்கள் மிகவும் கஷ்டப்பட வேண்டியுள்ளது. பிறப்பு சான்று பெற, தற்போதுள்ள நடைமுறை மாற்றி, மிகவும் எளிதாக்க வேண்டும். மண்டலம், மாவட்டம், தொகுதி வாரியாகஆதார் சேவை மையம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
