பெரம்பலூர் அருகே பாலத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

அரசு ஒப்பந்த பணிகள் நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் கொடுக்கும் கமிஷனை பெற்றுக் கொண்டு இருப்பதனால் நிறைவேற்றப்படும் பல திட்டங்கள் ஏனோ தானோ என்று இருக்கிறது.
பெரம்பலூர் மக்கள் பயன்பாட்டிற்காக திட்டங்களை நிறைவேற்ற சொன்னால் ஏதோ கடமைக்காக வேலையை முடித்துவிட்டு கமிஷன் பார்க்கும் நிலை தான் பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகம் இருக்கிறது. அரசு ஒப்பந்த பணிகள் நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் கொடுக்கும் கமிஷனை பெற்றுக் கொண்டு இருப்பதனால் நிறைவேற்றப்படும் பல திட்டங்கள் ஏனோ தானோ என்று இருக்கிறது. அந்த வகையில் பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றது. அந்த வகையில் உடும்பியம் அருகே இரண்டு பாலங்கள் உள்ளது. அதில் இரண்டு இடங்களில் சேதமடைந்துள்ளது. சமீபத்தில் கட்டப்பட்ட இந்த பாலம் உடைந்து பெரும் சேதத்தை ஏற்படுத்துவதற்கு முன் புதிய கான்கிரீட் தளம் அமைத்து சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story