மதுவிலக்கு மற்றும் ஆயத்தர்வைத் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி.

திருவாரூர் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தர்வைத் துறை சார்பில் போதை பொருட்கள் கள்ளச்சாராயம் உள்ளிட்டவைகளுக்கு எதிரான மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி.
திருவாரூர் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்திர்வைத்துறை சார்பில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் எதிரான பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவர்களால் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விளமல் பகுதியில் அமைந்துள்ள கஸ்தூரிபாய் காந்தி தனியார் பள்ளி முன்பு தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியானது துர்காலயா சாலை வழியாக நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது இந்த விழிப்புணர்வு பேரணியை திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சௌமியா கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி பேரணியாக சென்றனர்.
Next Story