திரு வி.க.அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டம்..

திமுக அரசு தேர்தல் வாக்குறுதிபடி பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள்.
திருவாரூர் திரு.வி.க அரசு அறிவியல் கலைக்கல்லூரியில் 4,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு 150-க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், 103 கவுரவ விரிவுரையாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் தொடர்ந்து நான்காவது நாளாக ஈடுபட்டுள்ளனர். திமுக தேர்தல் வாக்குறுதி படி பணிநிரந்தரம் செய்ய வேண்டும், அது வரை நீதிமன்ற ஆணைப்படி ரூ. 50,000 ஊதியம் வழங்க வேண்டும், பெண் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
Next Story