புதிதாக கட்டப்பட்ட கலையரங்க கட்டிட திறப்பு விழா..

X

புள்ளமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கை மாணவர்களை கொண்டு குத்து விளக்கேற்றி திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புள்ளமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தொடங்கி வைத்தார். முன்னதாக பள்ளிக்கு வருகை தந்த சட்டமன்ற உறுப்பினருக்கு இருபுறமும் நின்று கைத்தட்டி மாணவர்கள் உற்சாகமாக வரவேற்றனர். பதினைந்தாவது நிதிக்குழு மானியத்தின் கீழ் மாவட்ட ஊராட்சி நிதியிலிருந்து 7.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கழிவறையை திறந்து வைத்தார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் பலன் தரும் மரக்கன்றுகளை நட்டு பசுமையை வளர்த்தார்.
Next Story