காங்கேயம் நகர்மன்றக் கூட்டம் நடைபெற்றது

X
காங்கேயம் நகராட்சி அலுவலக நகர்மன்ற கூடத்தில் நேற்று காங்கேயம் நகர்மன்ற சாதாரண கூட்டம் மற்றும் அவசர கூட்டம் காலை 11 மணி அளவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் ந. சூரியப்பிரகாஷ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கமலவேணி, நகராட்சி ஆணையர் கி. பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அங்கன்வாடி மையம் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.7.40 லட்சம், ஆழ்துளை கிணறுகளில் மோட்டார் பழுது நீக்க ரூ.4.50 லட்சம், தெரு விளக்கு பராமரிக்க ரூ.10 லட் சம், அலுவலக பயன்பாட்டிற்கு புதிய பிரிண்டர் வாங்க ரூ.2 லட்சம், நகராட்சியின் 18 வார்டுகளில் களைக் கொல்லி மருந்து அடிக்க ரூ.12 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடி மதிப்பிலான 27 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மேலும் இக்கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், நகராட்சி பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story

