தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டுஇருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பேரணியை மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) சதீஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். .................. உதகை பழங்குடியினர் பண்பாட்டு மைய வளாகத்தில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு போக்குவரத்து துறையின் சார்பில் நடைபெற்ற இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பேரணியை மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) சதீஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்தப் பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கலந்து கொண்டு உதகை சேரிங்கிராஸ் முதல் காபி ஹவுஸ் வரை சென்று நிறைவடைந்தது . மேலும் இதில் செல்போன் பேசிக் கொண்டு வாகனங்களை இயக்கக் கூடாது மற்றும் மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கக் கூடாது என்ற பதாகைகள் வாகனங்களில் அணிவித்தவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Next Story




