விவசாயம் செழிக்க சிறப்பு வழிபாடு செய்த கிராம மக்கள்
எப்ப நாடு கிராமத்தை சுற்றிலும் அதிக அளவில் விவசாய நிலங்கள் உள்ளதால் வனப் பகுதிக்குள் உள்ள இந்த தெய்வம் விவசாயம் செழிக்க அருள்பாலிப்பதாக நம்பிக்கை தெரிவிக்கின்றனர் உள்ளூர் மக்கள் ................................. விவசாயம் செழிக்க அருள்பாலிக்கும் அடர்ந்த வனப்பகுதிக்குள் எப்பநாடு மலை மீதுள்ள சிவன் கோவில் திருவிழா கோலாகலம் ...................... நீலகிரி மாவட்டம் உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தளம் மட்டும் இன்றி பல்வேறு சிறப்பு மிக்க ஆன்மிக ஸ்தலங்களையும் கொண்டுள்ளது. இங்கு பல்வேறு சிறப்பு வாய்ந்த கோவில்களும் உள்ளது. ஊட்டியை அடுத்துள்ள எப்பநாடு கிராம பகுதியில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பீர்முக்கு சிவன் கோவில். இந்த கோவிலில் வருடத்திற்கு முக்கியமான மூன்று நாட்களில் மட்டுமே திறக்கப்படுகிறது. செங்குத்தான மலையின் மீது அமைந்துள்ள இந்த கோவிலுக்கு நடந்து செல்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. இருப்பினும் வருடத்திற்கு ஒருமுறை இந்த கோவிலுக்கு நடந்து சென்று ஐயனை தரிசித்தால் அனைத்து வளமும் பெருகும் என்பது ஐதீகமாக உள்ளது. இதனால் சிறியவர்கள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரையிலும் கையில் தடியுடன் இந்த கோவிலுக்கு நடந்து வருகின்றனர். மேலும் இந்த கோவிலில் சிறப்பான காட்சி முனைகளும் இயற்கை காட்சிகளும் கண்களுக்கு விருந்தளிப்பதாக உள்ளது. முன்பொரு காலகட்டத்தில் ஆண் குழந்தை பிறந்தால் அவர்களுக்கு முடி காணிக்கை செலுத்துவதற்காக நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு செல்வார்களாம். ஆனால் ஒருவரின் கனவில் இறைவன் காட்சியளித்து இந்த இடத்தில் நான் ஜோதியாக உள்ளேன். இதனால் முடிக்காணிக்கை செலுத்துவதற்காக நீங்கள் அங்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்ததால் இன்றளவும் இங்கு முடி காணிக்கை செலுத்திய பிறகு இறுதி பூஜைகள் முடிக்கப்படுகிறது. மலையின் மீது ஆட்கள் நடந்து செல்வதே அரிதான விஷயமாக உள்ளதால் இந்த கோவிலில் மிகப்பெரிய கல் தூண் அங்கேயே உருவான கல்லினால் செதுக்கப்பட்டுள்ளது. எப்ப நாடு கிராமத்தை சுற்றிலும் அதிக அளவில் விவசாய நிலங்கள் உள்ளதால் வனப் பகுதிக்குள் உள்ள இந்த தெய்வம் விவசாயம் செழிக்க அருள்பாலிப்பதாக நம்பிக்கை தெரிவிக்கின்றனர் உள்ளூர் மக்கள் .
Next Story




