ஆவடியில் இருந்து வெளிநாட்டிற்கு ராணுவ உடைகள் ஏற்றுமதி : பெருமிதம்
ஆவடியில் செயல்படும் மத்திய அரசின் படை உடை உற்பத்தித் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட உடைகள் சுரிநாம் நாட்டிற்கு தொழிற்சாலையில் பொது மேலாளர் ரெட்டி அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார் தென் அமெரிக்காவின் வடக்கு பகுதியில் உள்ள சுரிநாம் என்ற நாட்டிற்கு 4ஆயிரத்து 500 ராணுவ உடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. சுரிநாம் நாட்டின் ராணுவ உடை கடந்த நவம்பர் மாதம் முதல் ஆவடி படைகலன் உடைத் உற்பத்தி தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டது. முதற்கட்டமாக ருபாய் 1 கோடியே 71 லட்சம் மதிப்பீட்டில் 4 ஆயிரத்து 500 உடைகளை ஆவடி படை உடை உற்பத்தி தொழிற்சாலையின் பொது மேலாளர் பி.எஸ்.ரெட்டி கொடி அசைத்து அனுப்பி வைத்தார். இந்தியாவில் இருந்து முதல்முறையாக ஆவடியில் இருந்து அயல்நாட்டிற்கு ராணுவ உடை ஏற்றுமதி செய்யப்பட்டது பெறுமை அளிப்பதாக பொது மேலாளர் பி.எஸ் ரெட்டி பெருமிதம் தெரிவித்தார்.
Next Story






