ராமநாதபுரம் தை அமாவாசை முன்னிட்டு பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்

ராமநாதபுரம் தை அமாவாசை முன்னிட்டு பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்
X
தை அமாவாசையையொட்டி நூற்றுகணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினர்:கூட்ட நெரிசலில் ஸ்தம்பித்தது
ராமநாதபுரம் தை அமாவாசையை ஒட்டி இன்று அதிகாலை முதல் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் நூற்றுகணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். உலகப்பிரசித்தி பெற்ற ராமேஸ்வரத்தில் அடி, மஹாளய மற்றும் தை அமாவாசை ஆகிய மூன்று அமாவாசையின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடுவது வழக்கம். இன்று தை அமாவாசையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரம் வந்திருந்த அதிகாலையில் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடி தன்னுடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு எள்ளு, பிண்டம் வைத்து தர்ப்பணம் கொடுத்து பூஜை செய்த பின் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் வளாகத்தில் உள்ள 21 புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். கூட்ட நெரிசலால் பல மணி நேரம் திருக்கோவில் வளாகத்திற்குள் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலின் நான்கு ரத வீதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது டன் கோவில் நுழைவு வாயிலில்;, பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தீவிர சோதனைக்கு பின் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் கூட்ட நெரிசலான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு ஆயுதம் தாங்கிய போலீசார்; தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் நூற்றுகணக்கான ராமேஸ்வரம் வந்ததால் போக்குவரத்து பாதிப்படைந்தது. கார் பார்க்கிங்கில் இட நெருக்கடியால் ராமேஸ்வரம் நுழைவு வாயிலுக்கு வெளியே சுமார் மூன்று கி.மீ தூரம் வரை வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் வெளியூர் செல்லும் பயணிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். தெருக்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் உள்ளூர் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. மேலும் மதுரை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய இடங்களிலிருந்து ராமேஸ்வரத்திற்கு இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தை அமாவாசையையொட்டி ஒரே நாளில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்துள்ளதால் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் எதுவும் ஏற்படாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் உத்தரவின் பெயரில் இரண்டு ஏடிஎஸ்பிக்கள் தலைமையில் 740 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். .
Next Story