அகில இந்திய பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூதியர் சங்கம் ஆலோசனை கூட்டம்

அகில இந்திய பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூதியர் சங்கம் ஆலோசனை கூட்டம்
X
அகில இந்திய பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் நான்காவது கிளை மாநாடு ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு சாலை ஆய்வாளர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே தமிழ்நாடு சாலை ஆய்வாளர்கள் சங்க கட்டிடத்தில் அகில இந்திய பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் நான்காவது கிளை மாநாடு அழைப்பிதழ் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கிளை தலைவர் சுசிலா மேரி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் மாநில அமைப்பு செயலாளர் சுந்தரராஜன் சங்க கொடி ஏற்றி வைத்தார். கிளைச் செயலர் ஜோதிநாதன் வரவேற்புரை மாவட்டச் செயலாளர் செல்வின் சத்யராஜ் துவக்க உரையாற்றினார். கிளைச் செயலர் அய்யனார் சாமி மாநிலத் துணைச் செயலர் ஜான் போர்ஜியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில செயலர் ராஜசேகர் சிறப்புரையாற்றினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அகில இந்திய பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூதிய சங்கம் சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story