லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் இளைஞர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
போளிவாக்கம் அருகே எதிரே வந்த லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் இளைஞர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் : இருவர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் : திருவள்ளூர் அடுத்த குப்பம் கண்டிகை பகுதியைச் சேர்ந்த தீபன்ராஜ். தீபன்ராஜிக்கு திருமணம் ஆகி 8 மாத கைக்குழந்தை உள்ளது.இவர் போளிவாக்கம் சத்திரம் பகுதியில் உள்ள எம் எஸ் எஸ் எல் என்ற தனியார் நிறுவனத்திற்கு இருசக்கர வாகனத்தில் இரு நண்பர்களும் சென்று கொண்டிருந்தபோது திருவள்ளூர் ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலை போளிவாக்கம் அருகே எதிரே வந்த லாரி மோதியதில் தீபன்ராஜ் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த தீபன்ராஜ் உடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.இருவரும் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்..தகவலறிந்த மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபன்ராஜின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.தீபன்ராஜிக்கு திருமணம் ஆகி 8 மாதக் குழந்தை உள்ள நிலையில் தீபன் ராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story



