ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை நடத்த அனுமதி தரக்கூடாது என பாஜகவினர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
தேனி பங்களாமேடு பகுதியில் வருகிற 2 ஆம் தேதி 7 ஒண்டர்ஸ் அமைப்பு சார்பில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது இதே போல் தேனியிலும் வருகிற இரண்டாம் தேதி காலை 7:00 மணி முதல் 11 மணி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என தேனி மாவட்ட பாஜகவினர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர் ஹேப்பி ஸ்ட்ரீட் எனும் நிகழ்ச்சியை நடத்துவதால் கலாச்சார சீரழிவு ஏற்படும் என்றும், தேனில் உள்ள பிரதான சாலையில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்தப்படுவதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்று புகார் தெரிவித்த பாஜகவின் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு அனுமதி தரக்கூடாது என்று தேனி நகர பாஜக தலைவர் ரவிக்குமார் தலைமையில் பாஜகவினர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர் தற்போது வரை ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்துவதற்கு தேனி மாவட்ட காவல்துறை அனுமதி தராத நிலையில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்தப்படுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது
Next Story




