உடையார்பாளையம் ஊராட்சிஒன்றிய நடுநிப்பள்ளியில் திருக்குறள் எழுதும் போட்டி வென்றவர்களுக்கு பரிசு

உடையார்பாளையம் ஊராட்சிஒன்றிய நடுநிப்பள்ளியில் திருக்குறள் எழுதும் போட்டி  வென்றவர்களுக்கு பரிசு
X
உடையார்பாளையம் ஊராட்சிஒன்றிய நடுநிப்பள்ளியில் திருவள்ளுவர் தினவிழாவை முன்னிட்டு உடையார்பாளையம் திருவள்ளுவர் ஞானமன்றம் சார்பில் நடைபெற்ற திருக்குறள் எழுதும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது,
அரியலூர் ஜன.30- உடையார்பாளையம் ஊராட்சிஒன்றிய நடுநிப்பள்ளியில் திருவள்ளுவர் தினவிழாவை முன்னிட்டு உடையார்பாளையம் திருவள்ளுவர் ஞானமன்றம் சார்பில் நடைபெற்ற திருக்குறள் எழுதும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது, நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் ஹரிசுந்தரராஜன் தலைமை வகித்தார். திருவள்ளுவர் மன்ற செயலர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். மன்றத்தலைவர் பேரசிரியர் தஸ்தகீர் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ், திருக்குறள் புத்தகம் வழங்கி திருக்குறளை ஒவ்வொரு மாணவ மாணவிகளும் தினந்தோரும் குறளைப்படித்து மனனம் செய்து 133 அதிகாரத்தை ஒப்புவித்தால் தமிழக அரசு தமிழ் வளர்சித்துறை சார்பில் 25ஆயிரம் தொகை வழங்கபடுகிறது, இதை பயன்படுத்தி வாழ்வில் உயர்ந்த நிலையை அடையவேண்டும் என்று பேசினார். எழுத்தாளர் பாவைசங்கர் கலந்துகொண்டு திருக்குறளில் அறம் என்ற தலைப்பில் பேசினார். நிகழ்ச்சியில் திருவள்ளுவர் ஞானமன்ற பொறுப்பாளர் தமிழாசிரியர் இராமலிங்கம், ஆசிரியர்கள் ஆறுமுகம், கார்த்திகேயன், மலர்கொடி, கனிமொழி, மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமையாசிரியர் வானதி நன்றி கூறினார்.
Next Story