வாணியம்பாடி அருகே லாரி கவிழ்ந்து விபத்து

X
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மேம்பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி, லாரியில் சிக்கிய லாரி ஓட்டுநரை போராடி மீட்ட பொதுமக்கள் வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் விசாரணை. கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து டிசு பேப்பர்களை (TISSUE PAPERS) ஏற்றிக்கொண்டு லாரி ஓட்டுனர் ஜெய்சங்கர் என்பவர் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தபோது திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் பகுதியில் லாரி சென்று கொண்டிருந்த போது, திடீரென ஓட்டுனர் கட்டுப்பாட்டு இழந்த லாரி பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலம் மீது சாலையின் மையப்பகுதியில் இருந்த தடுப்பின் மீது மோதி மேம்பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் ஜெயசங்கர் லாரியில் சிக்கிய நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி ஜெய்சங்கரை மீட்டு உடனடியாக அவரை சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இவ்விபத்து குறித்து வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...
Next Story

