நல்லூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

நல்லூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
X
நல்லூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
பரமத்தி வேலூர், ஜன.29: பரமத்தி வேலூர் தாலுகா கந்தம்பாளையம் அருகே கவுண்டிபாளையத்தை சேர்ந்தவர் ராஜகுமாரன்.லாரி டிரைவர். இவரது மகள் காயத்ரி (வயது 20). இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் கல் லூரியில் பி.இ. பயோ மெடிக்கல் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். குன் னமலை சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலுசாமி மகன் ராகுல் (22). டிரைவர். இவரும், காயத்ரியும் கடந்த 5 ஆண்டுகளாக காத லித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சேலம் அருகே உள்ள பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு நல்லூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து போலீ சார் இருவரது பெற்றோரையும் அழைத்து சமரசம் செய்து - ராகுல் குடும்பத்தாருடன் காயத்ரியை அனுப்பி வைத்தனர்.
Next Story