பெரம்பலூரில் அதிரடி சோதனை

அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபர்கள் கைது
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நான்கு நபர்களை கைது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் தனிப்படையினர் நடத்திய சோதனையில் மங்களமேடு உட்கோட்டம் குன்னம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட காடூர் கிராமத்தில் 1.ராமலிங்கம் (63) த/பெ முத்துசாமி, மெயின் ரோடு, காடூர், குன்னம் வட்டம், பெரம்பலூர் மாவட்டம், என்பவர் தனக்கு சொந்தமான ஓம் சக்தி மளிகை கடையில். மற்றும் 2) ராமலிங்கம் (33) த/பெ முருகன், கிழக்கு தெரு, காடூர், குன்னம் வட்டம், பெரம்பலூர் மாவட்டம், என்பவர் தனக்கு சொந்தமான ரேகா மளிகை கடை கடையில்
அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்த நிலையில் தனிப்படையினர் மற்றும் அவரது குழுவினர் ஆகியோர்கள் அடங்கிய குழுவினர் மேற்படி எதிரியை கைது செய்து குன்னம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். குன்னம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணகுமார் மேற்படி 1.ராமலிங்கம் (63) எதிரி மீது வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து 1.ஹான்ஸ் 75 பாக்கெட் (1.500-கிலோ), 2.விமல் பாக்கு 566 பாக்கெட் (905-கிராம்) மற்றும் 3. V1-பான் மசாலா 600 பாக்கெட் (600-கிராம்) மொத்தம் – 3 கிலோ, மற்றும் 2) ராமலிங்கம் (33) த/பெ முருகன், எதிரி மீது வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து 1.ஹான்ஸ் 22பாக்கெட் (440-கிராம்),
ஆகிய குட்கா பொருட்களை பறிமுதல் செய்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் தனிப்படையினர் நடத்திய சோதனையில் பெரம்பலூர் உட்கோட்டம் பெரம்பலூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட சிறுவாச்சூர் கிராமத்தில் 1.விஜயகணபதி(30) த/பெதர்மலிங்கம்,மெயின் ரோடு, சிறுவாச்சூர்,பெரம்பலூர். என்பவர் தனக்கு சொந்தமான லிங்கா மளிகை கடையில்.மற்றும்எளம்பலூர் ரோடுராமகிருஷ்ணா பள்ளி அருகில் 2.ராஜசேகர் @ தேங்காய்மணி (32) த/பெ ராஜேந்திரன், 12 வது வார்டு, நேரு தெரு,சங்குபேட்டை பெரம்பலூர்
அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்த நிலையில் தனிப்படையினர், மற்றும் அவரது குழுவினர் ஆகியோர்கள் அடங்கிய குழுவினர் மேற்படி எதிரியை கைது செய்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பெரம்பலூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வரதராஜன் அவர்கள் மேற்படி 1.விஜயகணபதி(30) எதிரி மீது வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து 1.ஹான்ஸ் 135 பாக்கெட் (2.700-கிலோ),2.கூல் லிப் 8 பாக்கெட் (100.8-கிராம்), 3.விமல் பாக்கு 150 பாக்கெட் (240-கிராம்) மற்றும் 4. V1-பான் மசாலா 150 பாக்கெட் (150-கிராம்) மொத்தம் – 3.190 கிலோ,* மற்றும் 2.ராஜசேகர் @ தேங்காய்மணி எதிரி மீது வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து 1.ஹான்ஸ் 10 பாக்கெட் (200-கிராம்),2.கூல் லிப் 10 பாக்கெட் (126-கிராம்), மொத்தம் 326 கிராம் ஆகிய குட்கா பொருட்களை பறிமுதல் செய்து இரண்டு எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story