கஞ்சா போதையில் ரகலையில் ஈடுபட்ட வாலிபர்

கஞ்சா போதையில் ரகலையில் ஈடுபட்ட வாலிபர்
X
போலீசார் விசாரணை
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஸ்டேட் வங்கி பஸ் நிறுத்தம் அருகே உள்ள டாஸ்மாக் கடை பகுதியில் 25 வயது வாலிபர் ஒருவர் கஞ்சா போதையில் ரகலையில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதி வழியாக வரும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் அவர்களை அடிப்பதும் திட்டுவதுமாக இருந்தார். மேலும் அப்பகுதி வழியாக வந்த கார் உள்ளிட்ட வாகனங்களை கையால் அடித்து வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினார். இதனை தட்டி கேட்டவர்களை அசிங்கமாக திட்டியும் தாக்கவும் செய்தார். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த விருத்தாசலம் போலீசார் அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர். அப்போது போலீசாருக்கு அந்த வாலிபர் ஒத்துழைப்பு அளிக்காமல் அசிங்கமாக திட்டிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் அப்பகுதியில் கிடந்த கயிறு ஒன்றை எடுத்து அவரது கைகளை கட்டி ஆட்டோவில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். உடன் போலீசார் அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால் தலைக்கேறிய போதையில் அந்த வாலிபர் இருந்ததால் அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை. அவரது செல்ஃபோன் என்னை வைத்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து வரவைத்து அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story