விருத்தாசலம் நகர திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர் ஆய்வுக் கூட்டம்

X
கடலூர் மேற்கு மாவட்டம், விருத்தாசலம் நகர திமுக சார்பில் விருத்தாசலத்தில் வாக்கு சாவடி முகவர் ஆய்வுக்கு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர அவை தலைவர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். முன்னதாக நகர செயலாளர் தண்டபாணி அனைவரையும் வரவேற்றார். பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், இளைஞர் அணி நகர அமைப்பாளர் பொன் கணேஷ், நகர துணை செயலாளர் நம்பிராஜன், தங்க அன்பழகன், குரு சரஸ்வதி, சந்தானலட்சுமி சுந்தரமூர்த்தி, நகர பொருளாளர் மணிகண்டன், மாவட்ட பிரதிநிதி பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் சுபா சந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விருத்தாசலம் நகர பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி முகவர்களிடமும் ஆய்வு நடத்தினார். அப்போது கடந்த தேர்தல்களில் திமுக பெற்ற வாக்கு விவரங்கள், வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ள வாக்காளர்களின் பெயர்களை சேர்த்தல், உள்ளிட்ட பணிகளில் வாக்குச்சாவடி முகவர்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் வருகின்ற தேர்தல்களில் அதிக அளவு வாக்குகள் பெறுவதற்கான ஆலோசனைகளையும் வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் நகர்மன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, டைலர் சிவா, தேவராஜ், மெக்கானிக் சரவணன், துரை கோவிந்தசாமி, பூந்தோட்டம் ராஜா, மணிவண்ணன், பூதாமூர்முத்து , மாரிமுத்து, ராஜ்குமார், தளபதி, கர்ணன், ஆனந்தன், துரை பாலு, தகவல் தொழில்நுட்ப அணி விக்கி, மகளிர் அணி சாவித்திரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாணவரணி மாவட்ட அமைப்பாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.
Next Story

