வி.இ.டி. மேல்நிலைப்பள்ளியில் கவிதை நூல் வெளியீட்டு விழா

X
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் எருமனூர் சாலையில் அமைந்துள்ள வி.இ.டி. மேல்நிலைப்பள்ளியில் கவிதை நூல் வெளியீட்டு விழா நடந்தது. முன்னதாக பள்ளியின் தலைமையாசிரியர் பிரபாகரன் வரவேற்றார். பள்ளியின் முன்னாள் மாணவர் வை.கா. பிரவீன் குமார் அவர்கள் எழுதிய வை.கா-வின் கவிதைகள் என்ற நூலை பள்ளியின் செயலாளர் இந்திரா வீரராகவன் வெளியிட, கல்வி குழும தலைவர் பத்மாவதி சக்திவேல், பொருளாளர் கீர்த்திகா ராஜகோபால் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இதில் காந்தி, தனலட்சுமி காந்தி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவித்தலைமை ஆசிரியர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.
Next Story

