விருத்தாசலம் மணிமுக்தாற்றில் தை அமாவாசையை முன்னிட்டு திதி கொடுக்க குவிந்த மக்கள்

X
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வழியாக புண்ணிய நதியான மணிமுக்தாறு செல்கிறது. காசியை விட வீசம் பெரிது மணிமுத்தாறு என்பதற்கு ஏற்ப மாசி மகம், தை புரட்டாசி மற்றும் ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய அமாவாசை ஆகிய தினங்களில் பொதுமக்கள் பலர் தங்களுடைய முன்னோர்களுக்கு இந்த ஆற்றங்கரையில் திதி கொடுப்பது வழக்கம். அந்த வகையில் தை அமாவாசையை முன்னிட்டு திதி கொடுப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் விருத்தாசலம் மணிமுக்தாற்றில் குவிந்தனர். அப்போது அரிசி காய்கறிகள் வாழைப்பழம் வெற்றிலை பாக்கு எள் ஆகியவற்றை தர்ப்பணம் செய்வதற்காக கொடுத்து சூரியனை வழிபட்டு சென்றனர். இதனால்காலையில் இருந்து விருதாச்சலம் மணிமுத்தாற்றங்கரையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
Next Story

