அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய

பெண்கள் உதவி மையம் இலவச தொலைபேசி எண் 181 கிரைம் உதவி எண்கள் 1930 மேலும் மாணவ மாணவிகள் ஒவ்வொருவரும் தொடுதல் குறித்த விழிப்புணர்வு (GOOD TOUCH BAD TOUCH) பற்றி கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் கூறினர்.
பெரம்பலூர் மாவட்டம் காரை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி.கிரேஸ் பச்சாவ் மற்றும் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி இன்று 29.01.2025-ம் தேதி தலைமையாசிரியர் பிரபாகரன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மருதமுத்து, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மருத்துவர் வனிதா மற்றும் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு ஆலோசகர் தென்றல் மற்றும் மீரா ஃபவுண்டேசன் நிறுவனர் ராஜா முகமது, ஆகியோர்கள் இணைந்து காரை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், குழந்தை திருமணம் தடுப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய சிறப்பு உதவி ஆய்வாளர் குழந்தை திருமணம், போக்சோ சட்டம், கல்வியின் முக்கியத்தும், பெண்கல்வியின் அவசியம், பள்ளியில் இடைநின்ற மாணவ மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது ஆகியவை குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் போதைப்பொருட்களுக்கு அடிமையாதல் அதனால் ஏற்படும் பின் விளைவுகள் மற்றும் உயிரிழப்புகள் ஆகியவை குறித்து மாணவர்களிடம் விரிவான விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். மேலும் ஒவ்வொரு காவல்நிலையத்திலும் செயல்படும் இலவச புகார் எண்களான Women Help Desk 112 குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 முதியோர் உதவி எண்கள் 14567 ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் உதவி எண்களான சட்டவிரோத மது விற்பனை புகார் எண் 10581 பெண்கள் உதவி மையம் இலவச தொலைபேசி எண் 181 கிரைம் உதவி எண்கள் 1930 மேலும் மாணவ மாணவிகள் ஒவ்வொருவரும் தொடுதல் குறித்த விழிப்புணர்வு (GOOD TOUCH BAD TOUCH) பற்றி கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் கூறினர் . பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் பெண் குழந்தை திருமணத்தை எதிர்ப்போம்.
Next Story