தொடரும் கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டம்..

X

திருவாரூர் மாவட்டம் திரு வி கே அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஐந்தாவது நாளாக கௌரவ விரிவுரையாளர்கள் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவாரூர் திரு.வி.க அரசு அறிவியல் கலைக்கல்லூரியில் 4,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு 150-க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், 103 கௌரவ விரிவுரையாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஐந்து நாளாக ஈடுபட்டுள்ளனர். அரசு தேர்தல் வாக்குறுதி படி பணிநிரந்தரம் செய்ய வேண்டும், அது வரை நீதிமன்ற ஆணைப்படி ரூ. 50,000 ஊதியம் வழங்க வேண்டும், பெண் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கௌரவ விரிவுரையாளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் திரு.வி. க அரசு கலை அறிவியல் கல்லூரியில் நேரில் சந்தித்து போராட்டத்தின் தன்மை குறித்து கேட்டறிந்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றினார்.
Next Story