அரசின் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்..

X

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் நடைபெற்று வரும் அரசின் வளர்ச்சி திட்ட பணிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஶ்ரீ நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டம்,குடவாசல் ஒன்றியம், மஞ்சக்குடி ஊராட்சியில், நடைபெற்று முடிந்த அரசின் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் இதில் 15வது மத்திய நிதிக்குழு மானியம் 2024-2025ன் கீழ் பழுதுநீக்கம் செய்யப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடத்தினை பார்வையிட்டும், அதனைத்தொடர்ந்து அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுவரும் மதிய உணவினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சாப்பிட்டு, உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இவ்ஆய்வில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர், ராஜ்குமார், ஒன்றிய பொறியாளர் சர்மிளா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story