ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புத்தகத் திருவிழா

X
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வருகிற31-ஆம் தேதி வரை (3 நாள்கள்) நடைபெறும் இந்த புத்தகத் திருவிழா தொடக்க நிகழ்வுக்கு வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஜானகிராமன் தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி அறிவொளி புத்தகத் திருவிழா அரங்கத்தைத் திறந்துவைத்தாா். முதல் விற்பனையை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தொடங்கி வைக்க அதை புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணன் பெற்றுக் கொண்டாா். அரசு மகளிா் கல்லூரி முதல்வா் இந்திரா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பிரான்சிஸ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டனா். மூத்த வழக்குரைஞா்கள் மோகனசுந்தரம், இளங்கோவன், மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞா் அழகா்சாமி, மாவட்ட அரசு வழக்குரைஞா் சிவகுமாா், வழக்குரைஞா் சங்கச் செயலா் சித்திரைச்சாமி, பொருளாளா் வல்மீகிநாதன், இணைச் செயலா் நிருபன்சக்கரவா்த்தி, வழக்குரைஞா்கள், நீதிமன்ற அலுவலா்கள் கலந்து கொண்டனா். இந்த புத்தகத் திருவிழாவில் சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில், 30 ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
Next Story

