சிவன்மலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை

X
காங்கேயம் அடுத்துள்ள பிரசித்தி பெற்ற சிவன்மலை முருகன் கோவிலில் நேற்று தை மாத அமாவாசை தினத்தை யொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் நேற்று கோவில் நடை திறக்கப்பட்டு, கோமாதா பூஜை நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சிவன்மலை சுப்பிரமணியசாமியும், வள்ளி, தெய்வானையும் அலங்கரிக்கப்பட்ட மயில் வாகனத்தில் மலையை சுற்றி வெளிப்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Next Story

