கன்னியாகுமரியில் புகையிலை விற்ற கடைகளுக்கு சீல்

X

குமரி
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி மாவட்டத்தில் புகையிலை ஒழிப்பு பணிகள் தீவிரம் அடைந்து உள்ளது. கன்னியாகுமரியில் சன்னதி தெரு, சின்னமுட்டம், கோவளம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட கணேஷ் 701, கூல் லிப் புகையிலை விற்பனை நான்கு கடைகளில் கண்டுபிடிக்கப்பட்டு கன்னியாகுமரி காவல் துறை மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த நான்கு கடைகளையும் உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். செந்தில்குமார் உத்தரவுப்படி, அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் க.சக்திமுருகன் கன்னியாகுமரி காவல் துறை உதவியுடன் நேற்று மூடி சீல் வைத்தார். மேலும் , புகையிலை விற்பனையில் ஈடுபட்ட நான்கு நபர்களுக்கும் தலா ரூ. 25 ஆயிரம் வீதம் மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் ரூபாய் அபராதமும் உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை மற்றும் உணவின் தரம் குறித்த புகார்களை 9444042322 என்ற வாட்சப் எண்ணிலும் தெரிவிக்கலாம் என்று கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story