கோவை: சொத்து குவிப்பு வழக்கில் பெண்ணுக்கு ஒரு ஆண்டு சிறை !
![கோவை: சொத்து குவிப்பு வழக்கில் பெண்ணுக்கு ஒரு ஆண்டு சிறை ! கோவை: சொத்து குவிப்பு வழக்கில் பெண்ணுக்கு ஒரு ஆண்டு சிறை !](https://king24x7.com/h-upload/2025/01/30/787587-1000398708_1738209566591_1739585082633.webp)
X
![Coimbatore King 24x7 Coimbatore King 24x7](/images/authorplaceholder.jpg)
பத்திரப்பதிவு துறை அதிகாரி கோபாலகிருஷ்ணனின் மனைவி, சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் பத்திரப்பதிவுத்துறையில் ஏஐஜியாக இருந்தவர் கோவையைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன். இவர் மீதும் இவரது மனைவி தீனா கோபாலகிருஷ்ணன் மீதும் வருமானத்திற்கு அதிகமாக 34 லட்சத்து 58 ஆயிரத்து 342 ரூபாய் மதிப்பிலான சொத்து சேர்த்ததாக கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 2008 ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கோவை மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின் போது கோபாலகிருஷ்ணன் இறந்துவிட்டார். அவரது மனைவி மீதான வழக்கு தொடர்ந்து நடந்து வந்தது. நேற்று இவ்வழக்கை விசாரித்த கோவை மாவட்ட நீதிமன்ற நீதிபதி மோகனராம்யா, குற்றவாளி தீனா கோபாலகிருஷ்ணனுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
Next Story