மரத்தடியில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள்

மரத்தடியில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள்
X
ஆசிரியர்கள்
உளுந்துார்பேட்டை தாலுகா செங்குறிச்சி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியாக கடந்த 1929ம் ஆண்டு துவங்கப்பட்டது. பின்னர் 1961ல் நடுநிலைப் பள்ளியாகவும், கடந்த 1996ம் ஆண்டு உயர் நிலை பள்ளியாகவும், கடந்த 2017 ஆண்டு மேல் நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.தற்போது இப்பள்ளியில் 470 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் 18 ஆசிரியர்கள் பணியாற்றிவருகின்றனர். நுாற்றாண்டு காணவுள்ள இப்பள்ளியின் பரப்பளவு அதே நிலை தான் நீடித்து வருகிறது. ஆனால் பள்ளியின் தரம் உயர்த்தப்பட்டு, மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களுக்கு 4 வகுப்பறைகள் மட்டுமே உள்ளது. மாணவர்கள் அதிகரித்த போதிலும் கூடுதல் வகுப்பறை கட்ட வசதியை ஏற்படுத்தித் தரவில்லை. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் திணறி வருகின்றனர். கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் இல்லாததால் மரத்தடியில் மாணவர்களுக்கு பாடம் நடத்தவேண்டிய இக்கட்டான நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
Next Story