கோவையில் இருந்து வேதாரண்யத்திற்கு வாக்களிக்க லஞ்சம் வாங்க கூடாது

X

கொள்கையை வலியுறுத்தி 18 நாட்கள் நடைப்பயணம்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், வாக்களிக்க லஞ்சம் வாங்கக் கூடாது என்ற கொள்கையை வலியுறுத்தி, கோவையில் தொடங்கி, 18 நாட்கள் பாதயாத்திரை குழுவினர், உப்பு சத்தியாகிரக நினைவு கட்டடத்தில் யாத்திரையை நிறைவு செய்தனர். கோவை மாவட்டம் போத்தனூர் காந்தி நினைவு மண்டபத்தில் இருந்து, கடந்த 11-ம் தேதி தொடங்கிய பாதயாத்திரை, கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் வழியாக வேதாரண்யம் வந்தடைந்தனர். 18 நாட்கள் நடந்த பாதயாத்திரையில், வாக்களிக்க லஞ்சம் பெறக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிரச்சாரம் செய்து, துண்டு பிரசுரங்களும் வழங்கி வந்தனர். நிகழ்ச்சிக்கு, முனை இளைஞர் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் சிபி தலைமையில், 18 நாட்களும் நடை பயணத்தில் கௌதமன், அனுசி, சௌமியாஸ்ரீ, அர்ச்சனா, சைலாபானு உள்ளிட்டவர்கள் தொடர்ச்சியாக நடைபயணம் மேற்கொண்டு, வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் நடைபெற்ற மண்ணில் யாத்திரையை நிறைவு செய்தனர். அவர்களுக்கு வழிநெடுகிலும், மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Next Story