மின்மாற்றியை உடைத்து காப்பர் ஒயர் திருட்டு

X

திருட்டு
திருக்கோவிலுார் அருகே உள்ள கீழத்தாழனுார் எல்லைக்கு உட்பட்ட கடலுார் புறவழிச் சாலையில் 63 கே.வி.ஏ., திறன் கொண்ட மின்மாற்றி உள்ளது. இதன் மூலம் 20க் கும் மேற்பட்ட விவசாய மின் மோட்டார்கள் இயங்கி வருகிறது. நேற்று அதிகாலை 2:00 மணி அளவில் மர்ம நபர்கள் மின்மாற்றியை உடைத்து அதிலிருந்து காப்பர் ஒயரை திருடி சென்றனர். இதனால் மின்வாரியத்திற்கு ரூ. 4 லட்சம் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் விவசாய நிலங்கள் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளது.உதவி மின் பொறியாளர் சம்பத் ராஜன் புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் திருக்கோவிலூர் பகுதியில் கடந்த ஓராண்டில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட மின்மாற்றி உடைக்கப்பட்டு அதில் இருந்த காப்பர் ஒயர் திருடப்பட்ட சம்பவம் மின்வாரியத்தை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இனியாவது மின்மாற்றி காப்பர் கம்பியை திருடும் மர்மகும்பலை போலீசார் கண்டறிந்து கைது செய்தால் மட்டுமே இச்சம்பவத்தை தடுத்து நிறுத்த முடியும்.
Next Story