முன்னுதாரணமாக திகழ்ந்த குடியிருப்பு மக்கள்.

மதுரை அருகே குடியிருப்புவாசிகள் நமக்கு நாமே திட்டத்தின் படி தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
மதுரை மாநகராட்சி 92 வது வார்டுக்கு உட்பட்ட எம் , எம் சிட்டி , காவிரி நகர் விரிவாக்கப் ஆகிய பகுதிகளில் சுமார் 700 க்கும் மேற்பட்ட வீடுகளில் 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மதுரை மாநகராட்சி காலனி வழியாக முத்துப்பட்டி செல்லும் சாலையில் பொதுமக்கள் நடமாட்டமின்றி இருப்பதால் ஏராளமான கட்டிட கழிவுகள், குப்பைகளை கொட்டி திடீர் குப்பை மலையை உருவாக்கி நோய் தொற்று பரவும் நிலையில் இப்பகுதி மக்கள் உள்ளனர். எனவே எம்.எம் சிட்டி மற்றும் காவேரி நகர் விரிவாக்க பகுதி குடியிருப்போர் நல சங்க பொதுமக்கள் ஒன்று சேர்ந்து மதுரை மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தனர். சுமார் 150 டன் குப்பைகளை உடனே அகற்ற முடியாத நிலையில் குடியிருப்பு சங்க நிர்வாகிகளும், மதுரை மாநகராட்சியும் இணைந்து நமக்கு நாமே திட்டம் மூலம் இணைந்து செயல்படுத்த 92 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கருப்பசாமி முயற்சியின் பேரில் சங்க உறுப்பினர்களிடம் நிதி திரட்டி குப்பைகளை அகற்றும் திட்டத்தை செயல்படுத்தினர். இதனை தொடர்ந்து நேற்று (ஜன.29) 92 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கருப்பசாமி தலைமையில் குடியிருப்போர் நல சங்க தலைவர் செல்வம், செயலர் காதர் உசேன், பொருளாளர் செந்தில்குமார் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் "குப்பைகளை பொதுவிடங்களில் கொட்டாமல் குப்பைத் தொட்டியில் போடுவோம்" "நமது பகுதி தூய்மையான பகுதி அதனை பராமரித்து தூய்மை பணியாளர்களுக்கு உதவுவோம் " போன்ற வாசகங்களுடன் உறுதிமொழியை வாசித்து மற்றவர்களுக்கு முன்னுதரணமாக திகழ்கின்றனர்.
Next Story