சித்தலுார் கோவிலில் தை அமாவாசை சிறப்பு பூஜை
![சித்தலுார் கோவிலில் தை அமாவாசை சிறப்பு பூஜை சித்தலுார் கோவிலில் தை அமாவாசை சிறப்பு பூஜை](https://king24x7.com/h-upload/2025/01/30/787619-1002875203_1738210189385_1739726770493.webp)
X
![Kallakurichi King 24x7 Kallakurichi King 24x7](/images/authorplaceholder.jpg)
பூஜை
தியாகதுருகம் அடுத்த சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் மஞ்சள் காப்பு அலங்காரமும் செய்யப்பட்டது.கருவறையில் உள்ள பிரம்மாண்ட புற்றுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.மாலையில் கோவிலுக்கு முன் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த மிளகாய் வற்றலை தீயிலிட்டு பூஜைகள் நடந்தது. இரவு உற்சவர் அம்மன் அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சலில் வைத்து பூசாரிகள் தாலாட்டு பாடி ஆராதனை நடத்தினர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
Next Story