மாணவர்களுக்கு மருத்துவ காப்பீட்டு முகாம்

X
திருநாவலுாரில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ காப்பீட்டு முகாம் நடந்தது. திருநாவலூர் வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ காப்பீட்டு முகாம் நடந்தது. மாவட்ட உதவித்திட்ட அலுவலர் மணி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.வட்டார வளமைய மேற்பார்வையாளர் சசிகலா சிறப்புரையாற்றினார். முகாமில் மருத்துவர்கள் சிவராமன், சித்ரா, சசிகலா, சதா வெங்கடேஷ் ஆகியோர் மாணவர்களை பரிசோதனை செய்தனர். புதிய அடையாள அட்டை வழங்குதல், பஸ் மற்றும் ரயில் பயணச் சலுகைகளுக்கான அட்டை வழங்குதல், தேசிய அடையாள அட்டை வழங்குதல், உபகரணங்கள் பெறுவதற்கான பரிந்துரை செய்தல் உள்ளிட்ட பணிகள் நடந்தது.
Next Story

