அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி வரவழைத்து பெண்ணிடம் இருந்த நகை பணம் பறிப்பு...*

X
விருதுநகரில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி வரவழைத்து பெண்ணிடம் இருந்த நகை பணம் பறிப்பு... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சாலை பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தை சேர்ந்தவர் ரம்யா இவரது கணவர் குருநாதன். இந்த நிலையில் ரம்யாவிற்கு தொலைபேசி மூலம் தங்களுக்கு சத்துணவுவில் வேலை கிடைத்து உள்ளதாக கூறி விருதுநகரில் சூலக்கரை பகுதியில் உள்ள தங்கும் விடுதிக்கு நேர்காணலுக்கு போலியாக வரச் சொல்லி உள்ளனர் மேலும் இதனை நம்பிய ரம்யா கையில் ஆயிரம் ரூபாய் பணம் படித்த சான்றிதழ் உடன் ரம்யா நேர்காணலுக்கு வந்ததாக கூறப்படுகிறது அவர்கள் கூறிய தங்கும் விடுதி முன்பு நின்று கொண்டிருந்த ரம்யாவிடம் போலியான நேர்காணலுக்கு வர சொன்ன நபர்கள் காரில் வந்து அவர் அணிந்திருந்த மூன்று பவுன் தங்க நகை மற்றும் கையில் வைத்திருந்த 1000 ரூபாய் பணம் மற்றும் படித்த சான்றிதழ் ஆகியவற்றை பறித்து கொண்டு காரில் மாயமாகி உள்ளனர் மேலும் இந்த சம்பவம் குறித்து ரம்யா சூலக்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூலக்கரை போலீசார் வழிப்பறி சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அரசு வேலை கிடைத்து இருப்பதாக பெண்ணை நூதன முறையில் வரவழைத்து அந்த பெண்ணிடம் இருந்த நகை பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் விருதுநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story

