அரியலூர் பேருந்து நிலையம் முன் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி முழு உருவ வெண்கலச் சிலை நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம்

அரியலூர் பேருந்து நிலையம் முன் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி முழு உருவ வெண்கலச் சிலை நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம்
X
அரியலூர் பேருந்து நிலையம் முன் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி முழு உருவ வெண்கலச் சிலை நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூர், ஜன. 30- அரியலூர் பேருந்து நிலைய வெளிப்புறத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைப்பது என நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூர் நகராட்சி அலுவலக கூட்ட மன்றத்தில், நகர் மன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர் மன்றத் தலைவர் சாந்திகலைவாணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கலியமூர்த்தி, நகராட்சி ஆணையர்(பொ)விஜயகார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், அதிமுக உறுப்பினர் வெங்கடாசலம் பேசுகையில், கூட்ட மன்ற அனுமதி பெறாமல் வியபாரிகளிடம் வரி வசூலிப்பதை கண்டனம் தெரிவித்தார். மேலும் எவ்வளவு தொகை வசூலிக்கப்படுகிறது என்பதனை தெரிவிக்க வேண்டும். எனது வார்டு பகுதியில் கட்டப்பட்டுள்ள இரண்டு பூங்காக்கள் எப்போது திறக்கப்படும் என்று கேட்டுக் கொண்டார். ஆணையர்(பொ)விஜயகார்த்தி: முன்பு இருந்த ஆணையர் மேற்கொண்ட நடைமுறைகளை பின்பற்றி வியாபாரிகளிடம் வரி வசூலிக்கப்படுகிறது. கட்டப்பட்டுள்ள பூங்காக்கள் சில பணிகள் இருப்பதால் விரைந்து முடிந்து திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், நகராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலையத்தின் வெளிப்புறத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு முழு உருவ வெண்கல சிலை நிறுவுவது, இப்பேருந்து நிலையத்திலுள்ள கலைஞர் நுழைவு வளைவு மற்றும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நினைவு வாயிலை சரி செய்வது, சத்யா நகர் மற்றும் எம்.ஜி.ஆர் நகரிலுள்ள புதை சாக்கடை நீர் உந்து நிலையம், திருச்சி சாலையிலுள்ள பிரதான உந்து நிலையத்தில் உள்ள மின் மோட்டார்களை ரூ.4.90 லட்சத்தில் சரி செய்வது, நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகிக்கும் திருமானூர் தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து அரியலூர் உள்ள பிரதான குழாய்களில் பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் ரூ.4.80 லட்சத்தில் மேற்கொள்வது ,பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளதால், கட்டிமுடிக்கப்பட்ட கடைகள், உணவகங்கள், கழிவறைகள் உள்ளிட்டவைகள் பொது ஏலத்தில் விடுவது என்பன உள்ளிட்ட 38 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அனைத்து நகர் மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு, தங்களது வார்டு பகுதிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்துத் தருமாறு கேட்டுக் கொண்டனர்.
Next Story