நடுநிலைப்பள்ளி ஆசிரியர் விசாரணைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்

நடுநிலைப்பள்ளி ஆசிரியர் விசாரணைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்
X
குமாரபாளையம் அருகே நடுநிலைப்பள்ளி ஆசிரியர், மாணவிகளை தனது கை கால்களை அமுக்கி விடக்கூறியதாக  புகார் வந்ததையடுத்து, அந்த  ஆசிரியரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வீரப்பம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வரும் நந்தகுமார் என்பவர் மதிய நேரங்களில் ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவிகளை தனது கை,கால்களை  அமுக்கி விடுமாறு கூறுவதுடன், மாணவிகளை பேட் டச் செய்ததாக  கூறிய தகவலின் அடிப்படையில்  திடீரென பள்ளியை மாணவிகளின் பெற்றோர் முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் போலீசார் மற்றும் வருவாய் துறை சார்பில் தாசில்தார்  சிவக்குமார் ஆகியோர் பள்ளியில் விசாரணை நடத்த சென்றனர் அப்பொழுது இன்று பள்ளியில் அறிவியல் ஆசிரியர் நந்தகுமார் விடுப்பில் உள்ளதால் கல்வித் துறை அதிகாரிகளை வரவழைத்து மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். பின்னர் ஆசிரியரிடம் விசாரணை நடத்தி, மாவட்ட கலெக்டர் வழிகாட்டுதல்படி  துறை ரீதியான அளவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் கூறி சென்றனர். இந்நிலையில் மாவட்ட எஸ்.பி. வழிகாட்டுதலில், ஏ.டி.எஸ்.பி. சண்முகம் உத்திரவின் பேரில் போலீசார் நேரில் வந்து, ஆசிரியரை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
Next Story