வாணியம்பாடி அருகே குப்பை அள்ளுவதுபோல் பூட்டிய வீட்டில் நுழைந்து பொருட்களை கொள்ளையடித்த போதை நபர்களை பிடித்து, காவல்துறையினரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்..
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே குப்பை அள்ளுவதுபோல் பூட்டிய வீட்டில் நுழைந்து பொருட்களை கொள்ளையடித்த போதை நபர்களை பிடித்து, காவல்துறையினரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்.. திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் ஏ.பி.நகர் பகுதியை சேர்ந்தவர் ராணி, கணவரை இழந்த இவர், செட்டியப்பனூர் பகுதியில் டிபன் கடை நடத்தி வரும் நிலையில், ராணி இன்று வழக்கம் போல் கடையிற்கு சென்றுள்ளார், இந்நிலையில் அப்பகுதியில் குப்பை அள்ளுவது போல் வந்த 3 நபர்கள் ராணியின் வீடு பூட்டப்பட்டிருப்பதை அறிந்து, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையடித்துள்ளனர், அப்பொழுது ராணியின் வீட்டில் கதவு உடைக்கும் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், ராணியின் வீட்டினுள் 3 நபர்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அவர்களை பிடித்து வைத்து, வாணியம்பாடி கிராமிய காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர், அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி கிராமிய காவல்துறையினரிடம் அந்நபர்களை பொதுமக்கள் ஒப்படைத்தனர், அதனை தொடர்ந்து காவலர்கள் அவர்களிடம் விசாரணை மேற்க்கொண்ட போது, அவர்கள் வாணியம்பாடியை சேர்ந்த ரபீக், அமர்ரஞ்சித், நசீம் என்பதும், இவர்கள் வாகனங்களுக்கு பஞ்சர் போடும் திரவத்தை (சொலுயூசன்) கொண்டு போதையில் இருப்பதும் தெரியவந்துள்ளது, உடனடியாக அவர்களை காவலர்கள் காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்..
Next Story



