மாற்றுத்திறனாளி வாகனம் மோதி பள்ளி மாணவியின் இரண்டு கால்கள் எலும்பு முறிவு

X
Komarapalayam King 24x7 |30 Jan 2025 5:22 PM ISTகுமாரபாளையம் அருகே மாற்றுத்திறனாளி வாகனம் மோதி பள்ளி மாணவியின் இரண்டு கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே மேல்மஞ்சுபாளையம் பகுதியில் வசிப்பவர் தீபாஸ்ரீ, 14, இவரது பள்ளி தோழி சம்ரிதாஸ்ரீ, 14. இருவரும் குடியரசு நாளில் காலை 09:30 மணியளவில், குமாரபாளையம் தனியார் பள்ளிக்கு வந்து விட்டு, திரும்ப வீட்டுக்கு சென்றனர். பேருந்திலிருந்து சேலம் கோவை புறவழிச்சாலை, நேரு நகர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, சாலையோரமாக நடந்து சென்றனர். அப்போது இவர்களுக்கு பின்னால் வேகமாக வந்த மாற்றுத்திறனாளி வாகனம் மோதியதில், பள்ளி மாணவி தீபாஸ்ரீயின் இரண்டு கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இவர் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மோதிய வாகனம் நிற்காமல் சென்றதால், இது குறித்து மாணவியின் தந்தை பழனி, 52, குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்துக்கு காரணமான வாகனத்தை தேடி வருகின்றனர். மாணவியின் உடன் வந்த பள்ளி தோழி சம்ரிதாஸ்ரீக்கு எவ்வித காயமும் இல்லை.
Next Story
