ஜல்லிக்கட்டு இடம் ஆய்வு செய்த ஆர்.டி.ஓ, டி.எஸ்.பி.

X
Komarapalayam King 24x7 |30 Jan 2025 5:35 PM ISTகுமாரபாளையம் அருகே ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள இடத்தை ஆர்.டி.ஓ, டி.எஸ்.பி. ஆய்வு செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஆண்டுதோறும் குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில், ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி ஜன. 1ல் நடைபெறவுள்ளதால், இதற்கான ஏற்பாடுகளை தலைவர் வினோத்குமார் செய்து வந்தார். திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. சுகந்தி, திருச்செங்கோடு டி.எஸ்.பி. இமயவரம்பன் உள்ளிட்ட கால்நடைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் இடத்தை ஆய்வு செய்தனர். இந்த இடத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மேற்கொள்ளப்படவேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனைகள் கூறினார்கள். இதில் தாசில்தார் சிவகுமார், இன்ஸ்பெக்டர் தவமணி, ஆர்.ஐ. புவனேஸ்வரி, நிர்வாகிகள் ராஜ்குமார், ரவி, வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story
