உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் அவிநாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்து, பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார்.

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் அவிநாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்து, பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார்.
X
திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக, திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட அம்மாபாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வகுப்பறைகளை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டத்தின் தொடர்ச்சியாக அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு அரசு அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்தார். இதில் அவிநாசி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அரசின் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகள் தங்களுடைய ஆய்வறிக்கையினை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்தனர். இதையடுத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனுக்கள் குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், கலந்தாய்வு கூட்டத்தில், மாவட்டம் முழுதும் இதுவரை பஸ்வசதியே இல்லாத கிராமங்களுக்கு மினி பஸ் செல்ல 97 வழித்தடங்களை புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே நாள் ஒன்றுக்கு இருமுறை மட்டுமே பஸ் சென்று வரும் கிராமங்களுக்கும் மினி பஸ் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
Next Story