பரமத்தி அகதிகள் முகாமை சேர்ந்த வாலிபர் மயங்கி விழுந்து சாவு

பரமத்தி அகதிகள் முகாமை சேர்ந்த வாலிபர் மயங்கி விழுந்து சாவு
X
பரமத்தி அகதிகள் முகாமை சேர்ந்த வாலிபர் மயங்கி விழுந்து சாவு போலீசார் விசாரணை.
பரமத்திவேலூர், ஜன.30- பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி அகதிகள் முகாமை சேர்ந்தவர் விஜயநாதன். இவரது மனைவி சுவிந்தலோத சுவிந்தலோஜினி (51). இவர்களுக்கு 2 மகள், 1 மகன் இருக்கின்றனர். இந்நிலையில் அவரது மகன் ஜீவநாதன்(32) பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தார். அப்போது வரும்பொழுதெல்லாம் மது அருந்திவிட்டு வந்துள்ளார். சரியாக சாப்பிடாமல் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் டாஸ்மாக் கடைக்கு · சென்று அதிக அளவில் மது அருந்தி உள்ளார்.அப்போது திடீரென மயங்கி அங்கே கீழே விழுந்துள்ளார். அதைப் பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜீவநாதன் ஏற்கனவே . இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சுவிந்தலோஜினி பரமத்தி போலீசில் புகார் ம் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்
Next Story