குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசளிப்பு
கரூர் மாவட்டம் குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி நூற்றாண்டு விழா, ஆண்டு விழா, தமிழ் கூடல் விழா என முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பிறகு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இதில் பள்ளி தலைமையாசிரியர், நகர்மன்ற தலைவர் சகுந்தலா, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜாபருல்லா, நகர்மன்ற துணை செயலாளர் செந்தில்குமார், நகர பொருளாளர் தமிழரசன், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் மற்றும் நகர் மன்ற உறுப்பினர் ஜெய்சங்கர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் மற்றும் நகர் மன்ற உறுப்பினர் சமீமா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்
Next Story