கோவில் பூட்டை உடைத்து அம்மன் தாலி திருட்டு : போலீசார் விசாரணை
பள்ளிப்பட்டு அருகே பட்டப்பகலில் கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த தாலி திருடும் சிசிடிவி காட்சி மூலம் போலீசார் விசாரணை திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே நொச்சிலி கிராமத்துக்கு அருகே ஏரிக்கரை ஓரமாக கங்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வழக்கம்போல் அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர் அப்போது கோவிலின் பூட்டை உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலி மற்றும் 20 ஆயிரம் ரூபாய் உண்டியல் பணம் திருடி சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமரா மூலம் அம்மன் கழுத்தில் இருந்த தங்கத் தாலி திருடிச் செல்லும் மூன்று பேர் கொண்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Next Story




